காதல் மனசு

காகிதம் பேனா இரண்டும்
கையிலிருந்தும் கவிதை தோன்றா
ஒர் அந்திமாலையில்
அவள் கொலுசு சப்தம்
கேட்ட கணம்
ஹை கவிதை வருது என
எனைவிட்டு
எட்டிக் குதித்து ஒடுகிறது
என் காதல் மனசு!

- ப்ரியன்.

1 பின்னூட்டங்கள்:

Sinthu said...

சரியா சொன்னீர்கள் ப்ரியன்

தொடர்ந்து எழுதுங்கள் உங்கள் படைப்புக்களை, வாழ்த்துக்கள்