நிலைக்கண்ணாடி!

நிலைக்கண்ணாடி!

ஈர சேலை அவிழ்த்து
புது சேலை புகுந்து
நகர முயன்றவளை,
வழி மறித்து
அணைக்க முற்பட்டேன்!

மூன்று நாள்
முணங்கிய படியே
முன்னேறினாய்!

"அதனாலென்ன?" இழுத்து
முத்தமொன்று வைத்தேன்!

செல்லமாய் இடித்து
தள்ளி "திருத்தவே
முடியாது"!
என்றப்டியே கசங்கிய
பகுதிகளை
கண்ணாடியில் கண்டு
திருத்தி நகர்ந்தாய்!

நீ அங்கேயே
விட்டுச் சென்ற
வெட்கத்தையே
கண் கொட்டாமல்
பார்த்து நிற்கிறது
நிலைக்கண்ணாடி!

இதற்காக இருக்கலாம்!

ஒர் முன்பனி இரவில்
அருகில் துயிலும்
இல்லாளும் அருமை மகனும்
பாம்பு தீண்டி
இறந்துப்பட்டதாக
கனவு கண்டு
உறக்கம் களைந்து
பதறி எழுந்து
அவர்கள் பத்திரம்
உண்ர்ந்து ஆசுவாசப்படுத்தி
மேசையில் அமர்ந்தது;

ஒருவேளை இதை
எழுதுவதற்காக இருக்கலாம்!