காத்திருக்கிறது காதல்

மலையின் ஆழ்சரிவுகளில்
சருகுகள் சரக் சரக் சத்ததில்
தளிர் பற்றி
வழுக்குப் பாறைக் கடந்து
அங்கங்கே தொங்கும் பாம்புகள் துரத்தி
சில்லென வெண்ணாடைத் தரித்த அருவி நனைந்து
கறும்குகைப் புகுந்து
கைக்கு எட்டிய பாறை விளிம்பு தொட்டு
அப்பக்கம் எட்டிப் பார்க்கையில்
அவளுடன் சேர்ந்து எனக்காக கைநீட்டிக்
காத்திருக்கிறது காதல்!

- ப்ரியன்.

1 பின்னூட்டங்கள்:

துடிப்புகள் said...

ஹைய்யோ.... இவ்வளவு கஷ்டப்படணுமா..
பொண்ணோட மனசுல ஏறுறதுக்கு, மலையேறவும் தெரியணுமா!