காதல் அகங்காரம்

புறப்பொருளுடன்
தொடங்கும்
என் கவிதைகளில்
எல்லாம் கூட
அகப்பொருள் திணித்து
அகங்காரமாய் சிரிக்கிறது
காதல்!

- ப்ரியன்

1 பின்னூட்டங்கள்:

Moorthi said...

//புறப்பொருளுடன்
தொடங்கும்//

வெளியழகில் மயங்கி ஒருவர்மேல் கொள்ளும் காதலானது


//என் கவிதைகளில்
எல்லாம் கூட//

எனது கவிதைகள் மாதிரி அவ்வப்போது பலபொய்களைப் பயன்படுத்தி

//அகப்பொருள் திணித்து
அகங்காரமாய் சிரிக்கிறது
காதல்!//

பர்சில் இருந்த பணத்தை எல்லாம் காலி செய்து அவளூக்கு செலவளித்தபின் அகங்காரம் கொண்டு சிரிக்கிறது எங்களுக்குள் எழுந்த காதல்!

நல்லா வெளக்குனேனுங்களா அண்ணாச்சி?!