நட்"பூ"...

துவண்ட கணம்
எனக்கு தோள்
சாய இடம் கொடுக்கும்
நட்பிற்கும்!

தவறும் கணம்
திட்டித் திட்டி
நேர் செய்யும்
தோழமைக்கும்!

என்
சந்தோசமெல்லாம் தனிமையில்
சுகிக்க விட்டு!
என்
துக்கமெல்லாம் கூடிப் பக்ரிதல் பொருட்டு
ஓடோடி வரும்
சினேகத்திற்கும்!

நட்பு, சினேகம் , தோழமை , நண்பு , நேசம்
என சில சொல்லிருக்கலாம் அப்பந்ததிற்கு
எனக்கு அவை
அகரவரிசைப் படிப் பார்த்தால்
நூறு நூறு சொற்கள்
உங்களின் பெயர் வடிவத்தில்!

நட்புக்கு ஒரு தினமிருக்கலாம்
ஆனால்,
உங்களிடம் கதைக்கும் நாள் ஓவ்வொன்றூம்
எனக்கு நட்பு தினமே!

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!

- ப்ரியன்.

2 பின்னூட்டங்கள்:

மூர்த்தி said...

அய்யா,

நட்பு என்பது தெய்வீகமானது. என் முதுமைக் காலத்திலும் அவர்களுடனான நட்பு தொடர்ந்து இருக்கும்!

யாத்திரீகன் said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள் ப்ரியன்...