முத்தம் - கடன்

கடன் வாங்கியும் பழக்கமில்லை
கொடுத்தும் வழக்கமில்லை
எனக்கு!

முதல் புன்னகை சிந்தினாய்
மறு புன்னகை பூத்தேன்!

கண்ணோடு கண் பார்த்தாய்
மறு பார்வை பரிசாய் தந்தேன்!

சில நாள் கழிந்து,
இதயம் உனக்கு கொடுத்தேன் என்றாய்
திருப்ப இயலாது எனது வைத்துக் கொள்
என சமாளித்தேன்!

இன்று நான்
முத்தம் தருவதாய் யோசனை
கண்டிப்பாக
நீ திருப்பியாக வேண்டும்!

ஏனெனில்,
கடன் வாங்கியும் பழக்கமில்லை
கொடுத்தும் வழக்கமில்லை
எனக்கு!

கொஞ்சம் பொறு கணக்கிலும்
நான் கொஞ்சம் சுமார்தான்;
ஒன்று கொடுத்து
இரண்டு கேட்டாலும் கேட்பேன்!

- ப்ரியன்.

5 பின்னூட்டங்கள்:

யாத்திரீகன் said...

குறும்புக்கார.. கவிஞர் தான் :-))))

நல்ல வேளை வட்டி என்று வழக்கமாக.. சொல்லும் காரணத்தை சொல்லுவீங்கனு பார்த்தேன்.. ஆனால்.. கணக்கு ஆமணக்குனு சொல்லி கலக்கிட்டீங்க...

துடிப்புகள் said...

:-*

ப்ரியன் said...

நன்றி செந்தில் & முகில்

Anonymous said...

priyan ungal kavithaigal ellame super!
congratulation!

கார்த்திக் பிரபு said...

hi priyan congratz yar..ur poems r good expecially andha sudu kattai parrtia kavidhi...keep it up..