இந்தப்படம் ஏதோ ஒரு காட்டில் எடுக்கப்பட்டதல்ல.என் மாமா தோட்டத்தின் கிணற்றுமேட்டில் எடுக்கப்பட்ட படமே.இங்கே இருக்கும் மரங்கள் என்ன மரம் எனச் சொல்லுங்கள் பார்க்கலாம்.கையில் பிடித்துள்ள பழம் அம்மரத்தின் பழமே.
க்ளூ : குயில்களுக்கு மிகவும் பிடித்த பழம் இது.
பதித்தவர் : ப்ரியன் @ மதியம் 12:18
குறிச்சொல் புகைப்படங்கள்
23 பின்னூட்டங்கள்:
நகா பலம் ( லவா பழம்) ?
தம்ழிலேயே பல பெயர்கள் என்பதால் சின்ன குழப்பம்.
செர்ரீப்பழங்களை திருடும் காற்று என்னிடம் சொன்னது ...
:)
நாவற்பழம்! எங்கள் பகுதியில் நவாப்பழம் என்றும் சொல்லுவாங்க!!
நாவல் பழம்.
இது தாங்க அவ்வைப்பாட்டிக்கு முருகன் கொடுத்த பழம்.
சுட்ட பழம் வேணுமா?
சுடாத பழம் வேணுமா?
நானும் இது செர்ரீப்பழம் என்றுதான் நினைத்தேன், செர்ரீப்பமரம் தென்னைமரம் இருக்கும் இடத்தில் இருக்க சார்த்தியம் குறைவு, ஒரு வேளை சிறி பழம் மாய் இருக்கலாம் இதுவும் குயிலுக்கு மிகவும் பிடித்தது, ஆனால் கிளையைபிடித்திருப்பவரின் பெருவிரல் நகத்தளவுக்கு அந்தப்பழம் பெருசாக இருக்காது, இது நாவற்பழம்தான், இதை சாப்பிட்டால் நாக்கு நாவல் நிறத்தில் வருமா?
வாங்க கார்மேகராஜா நகா(லவா) என நீங்க சொல்லுறீங்க மத்த மக்கள் என்ன சொல்லுறாங்கன்னு பாக்கலாம்
/*செர்ரீப்பழங்களை திருடும் காற்று என்னிடம் சொன்னது ...
*/
ஆகா!செர்ரீ மரம் ன்னு சொல்லுறீங்க இல்லையா கோவி
/*நாவற்பழம்! எங்கள் பகுதியில் நவாப்பழம்*/
எங்க பகுதியிலும் நவாப்பழம் ன்னு ஒரு பழம் இருக்கு ஆனா இது நவாப்பழமா என்னன்னு அப்புறம் மத்த மக்கள் என்ன சொல்லுறாங்கன்னு கேட்டுகிட்டு சொல்லுறேன் ;)
/*சுட்ட பழம் வேணுமா?
சுடாத பழம் வேணுமா?*/
ப்ரீயா கொடுத்தா எதுவானாலும் சரி சிந்தாநதி
வாங்க NONO,
ஒரு சின்ன ஆராய்ச்சியே பண்ணிட்டீங்க போங்க.மத்தவங்களும் சொல்லட்டும் பார்க்கலாம்.
4/5 பேர் நவாப் பழம் ன்னு சொல்லுறிங்க :)
இலையின் வடிவத்தையும் கிளையின் கருமையான நிறத்தையும் பார்த்தால் சந்தன மரம் என தோன்றுகிறது.
விழிப்பு சரியாக பிடிச்சுடீங்க :) வாழ்த்துக்கள்.
மக்களே இது நம்ம வீரப்பன் அண்ணாச்சி வெட்டி வெட்டி அனுப்பினதா சொல்லப்படும் 'சந்தன மரம்'
//மக்களே இது நம்ம வீரப்பன் அண்ணாச்சி வெட்டி வெட்டி அனுப்பினதா சொல்லப்படும் 'சந்தன மரம்'//
இது தான் சந்தன மரம்மா!!!?நீங்கள்தான் படம் எடுத்து ஆதாரத்தோட போட்டிருக்கிறீர்களே இதை எப்பிடி வெட்டியிருக்கமுடியும்;-)!!
///செர்ரீப்பழங்களை திருடும் காற்று என்னிடம் சொன்னது ...
*///
ஐ லவ் யூ.
(பாடலை முடித்து வைத்தேன் அவ்வளவுதான்)
///மக்களே இது நம்ம வீரப்பன் அண்ணாச்சி வெட்டி வெட்டி அனுப்பினதா சொல்லப்படும் 'சந்தன மரம்' ////
மெய்யாலுமா? ( நெசமாவா, உண்மையாவா?)
பின்ன... வீரப்பனோட மாவட்டத்துலியே பிறந்து வளந்துட்டு இத கூட கண்டு பிடிக்கலைன்னா எப்படி? :-)
/*நீங்கள்தான் படம் எடுத்து ஆதாரத்தோட போட்டிருக்கிறீர்களே இதை எப்பிடி வெட்டியிருக்கமுடியும்;-)!!*/
ஒருவேளை படம் எடுத்தப் பின் வெட்டி இருக்கலாம் இல்லையா ? ;)
உண்மை இதுதான் நண்பர்களே கிணற்று மேட்டில் ஒரு 50 மரங்களாவது இருக்கும் ஆனால் சின்னவயதிலிருந்து நான் பார்த்திருக்கிறேன் ஒரு மரமும் 8-9 அடி தாண்டி வளர்ந்தது இல்லை.யாராவது வெட்டி கடத்திவிடுவார்கள் :(
சந்தன மரம் தோட்டத்திலிருந்தால் அரசாங்கத்துக்குச் சொல்லணுமாம் ஆனா சொன்னா நாமதான் காவல் இருக்கனுமாமே :(
/*மெய்யாலுமா? ( நெசமாவா, உண்மையாவா?) */
அட!வீரப்பன் மேல சத்தியமுங்க
/*வீரப்பனோட மாவட்டத்துலியே பிறந்து வளந்துட்டு இத கூட கண்டு பிடிக்கலைன்னா எப்படி? :-) */
அதானே!
செர்ரீப்பழம் தானே ???
இல்லை செந்தழல்,விழிப்பு சரியான விடையை சொல்லிவிட்டார் பின்னூட்டத்தைப் பாருங்கள்
Post a Comment