வா காதலிக்கக் கற்றுத் தருகிறேன்

வா,
அந்தப் புல்லின்
தவம் கலையா வண்ணம்
மெதுவாக வந்து
அருகில் அமர்!

எதுவும் பேசாதே!
சின்ன முணுமுணுப்புக் கூட
வேண்டாம்!
மெளனம் தாய்மொழியாக்கு!

அலையென துள்ளிவரும்
எண்ண அலைகளை
அள்ளி
தூரப் போடு!

வா,
கொஞ்சம் நெருங்கி வா
மூச்சோடு மூச்சு முட்டி
இருவர் இருதயமும்
தகிக்கும் வரை
நெருங்கி வா!

உன் பெயர் மற!
என் பெயர் மறக்கடி!

மெலிதாய் சிரி!

நீ ஆண்
நான் பெண்
என்பது
துடைத்துப் போடு!

எக்காலம்
இக்காலம்
கேள்வி தொலை!

பார்
பார்
பார்த்துக் கொண்டே
இரு!

உன் இரு விழியில்
உயிர் கசிந்து ஒழுகி
என்னுயிரில் கலந்து
போகும் வரை
பார்த்துக் கொண்டே
இரு!

பசிக்காவிட்டாலும்
கண்களால்
கண்கள் பார்த்து
என் உயிர் புசி!
உன்னை
புசிக்க எனக்கு
கற்றுக் கொடு!

பொறு,
நீயும் நானும்
தின்றுத் தின்று
தீரும் கணம்
மரித்து
சொர்க்கம் போவோம்!

அங்கேயும்,
இப்படியே
காதல் தொடர்வோம்!

- ப்ரியன்.

15 பின்னூட்டங்கள்:

Senthooran said...

NIce one priyan.....

keep it upp.. waiting for other one...

ப்ரியன் said...

நன்றி செந்தூரன்

நளாயினி said...

"வா,
அந்தப் புல்லின்
தவம் கலையா வண்ணம்
மெதுவாக வந்து
அருகில் அமர்!

எதுவும் பேசாதே!
சின்ன முணுமுணுப்புக் கூட
வேண்டாம்!
மெளனம் தாய்மொழியாக்கு!"

பாராட்டுக்கள். நல்லதொரு கவிதை

ப்ரியன் said...

நன்றி நளாயினி

துடிப்புகள் said...

பொறு,
நீயும் நானும்
தின்றுத் தின்று
தீரும் கணம்
மரித்து
சொர்க்கம் போவோம்!

அங்கேயும்,
இப்படியே
காதல் தொடர்வோம்!

:-)

Anonymous said...

In some lines, i find 'Vairamuthu'
' Raaja

Vaa.Manikandan said...

என்னை மாதிரி சின்ன பசங்களுக்கும் சொல்லித்தாங்க நண்பரே!

ப்ரியன் said...

நன்றி முகில் :) இப்படி இட்டாலே உங்களுக்கு பிடித்தமானது என மகிழ்கிறேன்.

ப்ரியன் said...

அனானிமஸ் வைரமுத்துவின் பாதிப்பு இருந்தால் மகிழ்ச்சியே அவரைப் பார்த்துதானே சொல்லப் போனால் அவரது பல கவிதைகளை பெயர் மட்டும் மாற்றி எழுதிப் பார்த்தே கவிதை கற்றவர்களின் வரிசையில் இருப்பவன்தான் நானும் ;)

ப்ரியன் said...

மணிகண்டன் இதுவே எனது வலைப்பூவில் உமது முதல் பின்னூட்டம் என நினைக்கிறேன் நன்றி.நான் சொல்லி நீங்கள் கற்பதல்ல கவிதை தோண்டுங்கள் உங்களை,உங்களுள் பெரிய கவிஞன் காணலாம்

நளாயினி said...

என்னை மாதிரி சின்ன பசங்களுக்கும் சொல்லித்தாங்க நண்பரே!

மணிகண்டன் பெரிசாத்தான் ளொள்ளு பண்ணுறீங்க. நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீங்களா?. இப்படியான கருத்துக்களை பாத்தாலே ரென்சன் தான். தவழ யார் கற்றுக்கொடுத்தாங்க? நடக்க யார் கற்றுக்கொடுத்தாங்க. ?? ஆஆஆஆ. இப்பிடி எல்லாம் எழுதினா நல்ல பிள்ளை எண்டு சமூகத்துக்கு காட்டிற ஐடியாவோ......?!!! நோ சாண்ஸ். "இல்லை எங்கடை சமூகம் மூடி மறைச்சு முக்காடு போட்டாத்தான் நல்லதெண்டுதே அதைத்தான் நீங்க உங்கடை மனவெளியிலை நல்லா பதிச்சு வைத்திருக்கிறீங்களெண்டு நினைக்கிறன். நான் சொல்லுறது சரிதானே. இல்லாட்டி இப்படி முட்டாள் தனமா எழுதுவீங்களா? ஓப்பிணா இருங்க. சரியா. அது உங்கடை ஆரோக்கியத்துக்கு நல்லது.

கொழுவி said...

வா காதலிக்க கற்றுத்தர்றன் கற்றுத்தர்றன் எண்டுறியள்... எங்கை வரவேணும்.. எப்பிடி வரவேணும் எண்டதை பத்தி ஒண்டும் சொல்லேல்லையே..

தமிழ் செல்வன் said...

//நீ ஆண்
நான் பெண்//

னேரடியாக கவிதையை படித்துவிட்டு காதலிக்கலாமோ என்று எண்ணிய வேளையில் ப்ரியன் யார் என்று பார்த்தால் - அட ஆண். ம்ம்ம்... நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.

ப்ரியன் said...

கொழுவி உங்களுக்கு நான் நேரமும் இடமும் எல்லோரும் அறியும் வண்ணம் இட்டல் என் காதலியும் படித்துவிட்டு அந்நேரம் அங்கு வந்து பிடறியில் அடிப்பாள் அதனாலே நான் இந்த விளையாட்டுக்கு வரலே ;)

ப்ரியன் said...

/*
அட ஆண். ம்ம்ம்... நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான்.
*/

அடடா நான் கொடுத்து வெச்சதும் அம்புட்டுதான் போல...ச் சே நல்ல பொண்ணா பொறந்திருக்கலாம்

நன்றி தமிழ் செல்வன் என் காதலியை சிரிக்க வைத்த பின்னூட்டதிற்கு