சலனம்

மொட்டை மாடி
கலனிலிருந்து தட்டிவிட்டேன்;
சாக்கடையில் விழுந்து
பிரகாசித்துக் கொண்டிருந்தது
இரவெல்லாம் நிலவு
யாதுமொரு சலனமில்லாமல்!

- ப்ரியன்.

6 பின்னூட்டங்கள்:

ILA(a)இளா said...

சலனமே இல்லாமல்
நிலவை ரசித்தவிதம்
ஹ்ம்ம் அருமை

கார்த்திக் பிரபு said...

arumaiyana vaarthai 'kalan' ketkave idhmaga irukiradhu.valthukal priyan

தேவ் | Dev said...

கவிதை அருமை!!! அருமை!!!

யாத்திரீகன் said...

மிகவும் கலங்கிய மனநிலையில் இருக்கும் போது கூட... இந்த வரிகளை படிக்கும் போது எதோ ஒரு அமைதி மனசுல... கலக்கீட்டீங்க ப்ரியன்.. (உங்க மெஸேஜும், மெயிலும் கிடைத்தது, சென்னை வந்ததும் கூப்பிடுகிறேன்)...

மதுமிதா said...

பார்த்தேன்
ப்ரியன் பதிவில்
பிரகாசித்துக் கொண்டிருக்கிறது
பகலிலும் நிலவு

சனங்களின் மனதில்
சலனங்களை எழுப்பியபடி
யாதொரு சலனமில்லாமல்

லிவிங் ஸ்மைல் said...

Gud one