உள்ளிறங்கி நுழைகிறது வானம்!

நெற்றியில் பட்டு
தெறிக்கிறது மழைத்துளி!
உள்ளிறங்கி
நுழைகிறது வானம்!

- ப்ரியன்.

4 பின்னூட்டங்கள்:

நாகு said...

// நெற்றியில் பட்டு
தெறிக்கிறது மழைத்துளி!
உள்ளிறங்கி
நுழைகிறது வானம்!//


அழகான கவிதை... பாராட்டுக்கள்.

ம்ம்ம....

தையலிடம் நீர் கேட்டேன்
குவலையில் தந்தாள்
நீரோடு சேர்த்து நிலாவையும்!

உங்க கவிதையைப் படிச்சதும் நம்ம மண்டையும் துளியோண்டு யோசிக்க வைக்கிறது.

ப்ரியன் said...

நன்றி நாகு!

/*தையலிடம் நீர் கேட்டேன்
குவலையில் தந்தாள்
நீரோடு சேர்த்து நிலாவையும்! */

இது அருமை!நாகு!

நிலா நிலவு இரண்டும் ஒன்றையே குறிப்பிட்டாலும் இவ்விடத்தில்

நீரோடு சேர்த்து நிலவையும்! என்றி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.

Kuppusamy Chellamuthu said...

என்னங்க கவிதை எல்லாம் பன்ச் டயலாக் மாதிரி 2 வரிதான் எழுதுவீங்களா? ;-)

-குப்புசாமி செல்லமுத்து

நாகு said...

ஆம் நண்பரே...தாங்கள் கூறியது போல் நிலவையும் என்றால்தான் நன்றாக இருக்கிறது. நன்றி