* காதல் பேரானந்தம் *

கூந்தல் காட்டில்
அலைந்து திரிந்து;
அந்த வகிடு
ஒற்றைப் பாதையில்
ஒற்றையாய் உலாத்தி இருந்து;
உன் உச்சித் தொட்டு
எட்டிப் பார்க்கையில்
நெற்றிவெளியில்
விழுந்து தெறித்து;
கண் பள்ளத்தில்
விழுந்து தொலைந்துப் போன
அந்த கணம்!
ஆகா!பேரானந்தம்!!

- ப்ரியன்.

5 பின்னூட்டங்கள்:

துடிப்புகள் said...

அனுபவம்...
அனுபவியுங்கோ!

ப்ரியன் said...

நன்றி முகில்

rahini said...

vaalththukkal piriyan

eluthugkal ennum. kavithaippaanathil thodarugkal

rahini said...

vaalththukkal

ப்ரியன் said...

நன்றி ராகினி...வந்தமைக்கும்...விமர்சனம் தந்தமைக்கும்