சிறு ஆசை

வான் அளக்க
மேலெழும்பிய பறலொன்று 1
நெடுந்தூர அயணத்திடையில் 2
ரக்கை குவித்து
வந்தமர்கிறது கரையில்;
நதியை பருகித்
தீர்த்திடும் சிறு ஆசையோடு!

- ப்ரியன்.

1. பறல் - பறவை
2. அயணம் - பயணம்

3 பின்னூட்டங்கள்:

திரு said...

நல்ல கவிதை பிரியன்

Anonymous said...

எங்கே ப்ரியன் படத்தைக் காணோம்... கவிதை மட்டும் இருக்கிறது?

சின்னஞ்சிறு ஆசைதான் பறலுக்கு :)

Anonymous said...

அருஞ்சொற்கள் பயன்படுத்தியுள்ளீர்கள்... நன்றாக இருக்கிறது.... மரபுக்கவிதையின் சாயல் ;)