கன்னத்தில் முத்தம்

எனக்கு
கவிதையெல்லாம்
எழுத தெரியாதென்றபோது
கன்னத்தில்
அழுத்தமாய் ஆழமாய் அழகாய்
முத்தமிட்டு இப்போது
எழுதென்றாய்!

இப்போதும் சொல்கிறேன்
உன் இதழ் என் கன்னத்தில்
எழுதிய அளவுக்கு
எனக்கு கவிதை எழுத வராது!

- ப்ரியன்.

8 பின்னூட்டங்கள்:

நிலவு நண்பன் said...

எனக்கு
அடிவாங்கியெல்லாம்
பழக்கமில்லை என்றபோது
நீ உன் அண்ணனை விட்டு
பிரு பிரு வென்று என்னை
பிருத்துவிட்டுச் சென்றாய்

இப்பொழுது பாரேன்
போலிஸ் அடி கூட
வலிக்கவில்லையடி..


அன்புடன்

ரசிகவ் ஞானியார்

Anonymous said...

அடடா "இச்" என்று இருக்கு :-)

நேசமுடன்..
-நித்தியா

ப்ரியன் said...

நன்றி ரசிகவ்..சிறப்பான மறுமொழி கவிதைக்கு :)

ப்ரியன் said...

* அடடா "இச்" என்று இருக்கு :-) *

நன்றாக பாருங்கள் நித்தியா கொஞ்சம் ஈரமாகவும் இருக்கும்

tamilmagani said...

ரொம்ப நல்லாருக்கு. அழகான அழுத்தமான கவிதை.. கவிதை என்று சொல்வதைவிட காதல் கல்வெட்டுகள் எனலாம்!! நன்று!


பிரியமுடன்
தமிழ்மாங்கனி

ப்ரியன் said...

நன்றி தமிழ்மாங்கனி :)

rahini said...

m..atputhamana kavithai.
thodarnthu eluthugkal. priyan.
rahini

ப்ரியன் said...

நன்றி ராகினி வந்தமைக்கும் விமர்சனம் தந்தமைக்கும்