வலைப்பதிவர் சுற்றுலா - 2

வீரமணியைத் தொடர்ந்து


ரெடி செட் கோ... மடங்கி மடங்கி இருப்பதால் இது கவிதை அல்ல

பினாயிலுக்கு ஸ்ட்ரா

பூங்காவில் கூட்டு சேர்ந்து கூத்தடித்த
முன்னாள் தலைமை ஆசிரியனுக்கு விடை கொடுத்து
நகருங்கால்,
தம்பி அழைத்தது அவ்வாசிரியனே
பாலாவை சுட்டி அவரிடம் மன்னிப்பு கோரியதாய்ச் சொல்லும்
பேசிய பேச்சுக்கெல்லாம் ஏட்டிக்கு போட்டி பேசினேன்
தவறாய் எண்ணி இருக்கலாம்.


(கண்ணன் , தலைமை ஆசிரியர் , குப்புசாமி , ஜெய்சங்கர் , மா.சிவக்குமார் , சிங்.ஜெயக்குமார்,பாலபாரதி , நான் , அருள்குமார்)

தவறாக எண்ணுபவரல்ல பாலா என்பதினை பகன்று
ஓடி வந்து ஒட்டினேன் பாலாவுடன்
சில அந்தரங்க விடயங்கள் பேசிக் கொண்டு
பூங்காவின் வாசல் வந்தடைந்தோம்

அங்கே ஆளுக்கு ஆள் யார் யார் மாகாபலிபுரம்?
என்ற கேள்வி கொக்கியோடு
என்னைத் தவிர எல்லோரும் தயார்
ஒருவருக்கு மட்டும் வாகனம் இல்லை

என்னுடைய வாகனம் தந்து உதவ தயாராய் இருந்தும் (நிசமாகத்தானுங்க)
மறுத்துவிட்டனர் என் அலுவல் எண்ணி
வீரமணியும் அருளும் வாகனம்
சம்பாதித்து வர புறப்பட
தேநீர் அருந்த பறந்தது மிச்சப் பட்டாளம்

கடைசியில் பார்த்தால்
தேநீர் தேநீர் என கேட்டவர் பாலா மட்டும்
சிங் குளிர் பானம் கேட்க
சட்டென தடை வந்தது பூச்சிக் கொல்லிகள் பெயரால்
நாட்டு குளிர்பானமான இளநீருக்கு அடித்தது யோகம்
6 வெட்டுங்கள் என சொல்லி பேச்சு ஆரம்பிக்க


(
வீரமணி , ஜெய்சங்கர் , மா.சிவக்குமார் , அருள்குமார் ,பாலபாரதி)

சிவக்குமாரும் பாலாவும் கதை கதையாய்
புரியாத பெயர்கள்
புதிய பெயர்கள்
கொண்டு இலக்கியம் பேச
மற்றவர்கள் இளநீர் உண்டே
சொந்த கதை சோகக் கதைப் பேசினோம்

"தற்கொலை செய்து கொண்டாரா பாரதி?"
என பாலா தான் படித்த கட்டுரை சொல்ல
புதுமைப்பித்தன் கூட அப்படி இருக்கலாம்
என சிவக்குமார் கொளுத்திப் போட
பாலாவின் பம்பாய் (மும்பை) அனுபவம்
மெல்ல மெல்ல படர்ந்து விரிந்தது
அந்த பிளாட்பாரத்தில்

போண்டா பஜ்ஜியை
வேண்டாமென புறந்தள்ளி
சூடாக தேநீர் மட்டும் அருந்திய பாலா
இளநீரும் வேண்டுமென சொல்ல
மக்கள் நாங்கள் அவரை ஒருமாதிரி பார்க்க
பினாயிலுக்கே ஸ்டாரா போட்டு கொடுத்தால்
குடிக்கும் கும்பல் நாம் என்றபடியே
எதையும் கண்டு கேளாமல்
இளநீரையும் அடித்தார் ஒரு அடி

அதை ஒட்டி கள்ளு
தெளுவு என பேசி
தள்ளாடிபடியே அருளுக்காக
காத்திருத்திருந்து நின்றோம்

எனக்கோ அந்தரங்க அலுவல்
ஒரு பக்கம் மகிழ்ச்சி ஊட்டுனாலும்
என்னை விட்டுட்டு போறங்களே
பாவி மக்கள் என சங்கடமாகவும் இருந்தது

காத்திருந்த சில நொடியில் அருளும்
வீரமணியும் பறந்து வர (வாகனத்தில்தான்)
எல்லோரும் புறப்பட்டோம்

எந்தன் வாகனம் மவுண்ட் ரோடு நோக்கி விரைய
அன்பர்களின் வாகனம் பெட்ரோல் குடிக்க
பக்கத்திலேயே பங் தேடி நின்றது!

இனி 'தல' பாலபாரதி தொடர்வார்.

24 பின்னூட்டங்கள்:

மதி கந்தசாமி (Mathy) said...

நல்ல ரிலே தொடர். நான் படிச்சவரை ஆறோட நிக்குது.

புகைப்படங்களில் நம்ம ஊரைக் காட்டியதற்குப் பிரத்தியேக நன்றிகள்.

சென்னையிலிருக்கும் தமிழ் வலைப்பதிவாளர்கள் புகைப்படங்களுக்கென்று ஒரு கூட்டு வலைப்பதிவு வைத்து, என்னை மாதிரி ஆட்களை அப்பப்ப காதில் புகை வருமாறு செய்யலாமில்லையா? என்ன சொல்றீங்க? நினைச்சா, சென்னைக்கென்றே ஒரு தனிப்பதிவுகூடத் தொடங்கலாம். ;)

புகைப்படங்களில் இருப்பவர்களில் ஓரிருவரை அடையாளம் காண முடிகிறது. கொஞ்சம் பெயர் போட்டிருக்கலாமே.

சுவாரசியமான அனுபவம் - எங்களுக்கும்.

ப்ரியன் said...

நன்றி மதி :)

சரி நீங்களே கெஸ் பண்ணுங்களேன் க்ளூ :)

படத்தில் இருப்பவர்கள் பெயர்தான் ஆனால் ஒரு வரிசையாக இல்லை

முதல் படத்தில் இருப்பவர்கள்

பாலா
சிவக்குமார்
கண்ணன் (சிங் கின் நண்பர்)
ரிடைர்டு தலைமை ஆசிரியர்
அருள்
ஜெய்சங்கர்
ப்ரியன்
குப்புசாமி
சிங் ஜெயக்குமார்

இரண்டாவது படத்தில்

பாலா
சிவக்குமார்
வீரமணி
ஜெய்சங்கர்
அருள்

நாகை சிவா said...

//சூடாக தேநீர் மட்டும் அருந்திய பாலா
இளநீரும் வேண்டுமென சொல்ல
மக்கள் நாங்கள் அவரை ஒருமாதிரி பார்க்க
பினாயிலுக்கே ஸ்டாரா போட்டு கொடுத்தால்
குடிக்கும் கும்பல் நாம் //
அதே அதே
சரவணபவனில் சூடான பில்டர் காப்பி குடித்து கொண்டே அடுத்து ஐஸ்கீரிம் ஆர்டர் கொடுக்கும் ஆளுல நாங்க எல்லாம் :)

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

நம்ம ஆளுங்களுக்கு தொடர் படிக்கவே போரடிக்கும் இதுல க்ளு வேறயா...

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//ரெடி செட் கோ... மடங்கி மடங்கி இருப்பதால் இது கவிதை அல்ல
//

இங்கன தான்யா நீங்க உட்கார்ந்து இருக்கீங்க( எத்தனை காலத்துக்கு நிற்கவைப்பது?)

:)))

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//சூடாக தேநீர் மட்டும் அருந்திய பாலா
இளநீரும் வேண்டுமென சொல்ல
மக்கள் நாங்கள் அவரை ஒருமாதிரி பார்க்க
பினாயிலுக்கே ஸ்டாரா போட்டு கொடுத்தால்
குடிக்கும் கும்பல் நாம் என்றபடியே
எதையும் கண்டு கேளாமல்
இளநீரையும் அடித்தார் ஒரு அட//

அட ராமா... இதையுமா எழுதுறது...
அடப் போங்கப்பா..

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//சரவணபவனில் சூடான பில்டர் காப்பி குடித்து கொண்டே அடுத்து ஐஸ்கீரிம் ஆர்டர் கொடுக்கும் ஆளுல நாங்க எல்லாம் :)//

வாங்க சிவா..வாங்க.. நமக்கு சோடி இருக்குறப்போ கவலை இல்லை இனி.. :)))

G.Ragavan said...

இதுவும் கவிதையிலயா....நடக்கட்டும் நடக்கட்டும்...

எளநி குடிச்சீங்களாக்கும்...நல்லாயிருங்க...வயித்தெரிச்சலுக்கு இப்ப ரெண்டு டம்ளர் தண்ணியக் குடிக்கிறேன்.

ப்ரியன் said...

/*அதே அதே
சரவணபவனில் சூடான பில்டர் காப்பி குடித்து கொண்டே அடுத்து ஐஸ்கீரிம் ஆர்டர் கொடுக்கும் ஆளுல நாங்க எல்லாம் :)*/

அப்ப அதை ஐஸ் காப்பி னு சொல்லுங்க சிவா

ப்ரியன் said...

/*நம்ம ஆளுங்களுக்கு தொடர் படிக்கவே போரடிக்கும் இதுல க்ளு வேறயா... */

அப்ப்டீன்றீங்களா

மதி படத்துக்கு கீழே பேர் போட்டாச்சு பாருங்க

ப்ரியன் said...

/*இங்கன தான்யா நீங்க உட்கார்ந்து இருக்கீங்க( எத்தனை காலத்துக்கு நிற்கவைப்பது?)

:)))*/

ஹி ஹி ஓவரா புகழாதீங்க தல

ப்ரியன் said...

/*அட ராமா... இதையுமா எழுதுறது...
அடப் போங்கப்பா..*/

இதுக்கே இப்படியா? முன்னாடி பதிவுக்கு வெச்ச தலைப்பு என்ன தெரியுமா தல...

"பினாயிலுக்கு ஸ்ட்ரா" இது எப்படி இருக்கு :)

ப்ரியன் said...

/*வாங்க சிவா..வாங்க.. நமக்கு சோடி இருக்குறப்போ கவலை இல்லை இனி.. :)))*/

ஆகா கூட்டம் சேந்துட்டாங்கயா

ப்ரியன் said...

/*இதுவும் கவிதையிலயா....நடக்கட்டும் நடக்கட்டும்...*/

ம் இதுக்குத்தான் முன்னாடியே போட்டு வெச்சேன் ** மடங்கி மடங்கி இருப்பதால் இது கவிதை அல்ல **


/*எளநி குடிச்சீங்களாக்கும்...நல்லாயிருங்க...வயித்தெரிச்சலுக்கு இப்ப ரெண்டு டம்ளர் தண்ணியக் குடிக்கிறேன்.*/

விடுங்க ராகவன் அடுத்த முறை பார்க்கும் போது 2 எளநி வாங்கி தரேன் :)

பொன்ஸ்~~Poorna said...

//"பினாயிலுக்கு ஸ்ட்ரா" இது எப்படி இருக்கு :) //

ஆக்சுவலா.. சூப்பரா இருக்கு..

பாலா முறைக்கிறாரு.. ப்ரியன்.. நல்லாவே.. இல்லை :))

ப்ரியன் said...

ஆமா ராகவன் எங்கே "பரமாத்த குரு" சீக்கிரம் எழுதுங்கப்பு

♠ யெஸ்.பாலபாரதி ♠ said...

//"பினாயிலுக்கு ஸ்ட்ரா" இது எப்படி இருக்கு :)//

உம்மை காதல் இளவரசன்ன்னு சொன்னதுக்காகவா...இந்த குத்து.., வேணும்மா.. காதல் மாமன்னன் அப்படின்னு போட்டுடவா...?

மதுமிதா said...

ப்ரியன் அடுத்த தொகுதிக்கான கவிதைகள் தயாராயிடுச்சா?

நாம ரெண்டு பேர் மட்டும் போகலியா ப்ரியன்:-(

நற நற நற

Naveen Prakash said...

//சிவக்குமாரும் பாலாவும் கதை கதையாய்
புரியாத பெயர்கள்
புதிய பெயர்கள்
கொண்டு இலக்கியம் பேச
மற்றவர்கள் இளநீர் உண்டே
சொந்த கதை சோகக் கதைப் பேசினோம்//

:))))))))))))

//பினாயிலுக்கே ஸ்டாரா போட்டு கொடுத்தால்
குடிக்கும் கும்பல் நாம் என்றபடியே
எதையும் கண்டு கேளாமல்
இளநீரையும் அடித்தார் ஒரு அடி//

ப்ரியன் பாலாவைப் போட்டுத்தாக்கீட்டீங்களே :)))))

ப்ரியன் said...

/*காதல் மாமன்னன் அப்படின்னு போட்டுடவா...? */

என்னது மாமன்னனா...அப்படின்னா வயசை அதிகமா காட்டிடும் தல இளவரசனே இருக்கட்டும் ஹி ஹி ஹி :)

ப்ரியன் said...

/*ப்ரியன் அடுத்த தொகுதிக்கான கவிதைகள் தயாராயிடுச்சா?*/

இல்லை மதுமிதா...அது பாலா குடுத்த பில்டப்பு நம்பாதீங்க

/*நாம ரெண்டு பேர் மட்டும் போகலியா ப்ரியன்:-(*/

ஆமா மதுமிதா :(

ப்ரியன் said...

/*ப்ரியன் பாலாவைப் போட்டுத்தாக்கீட்டீங்களே :)))))*/

உண்மையை சொன்னேன் அவ்வளவே நவீன் ;)

தூயா said...

ப்ரியன் இது தான் நீங்களா.. :)
பாலாஸ் எங்க போனாலும் இப்படி தானா? ;)

ப்ரியன் said...

/*பாலாஸ் எங்க போனாலும் இப்படி தானா? ;) */

ஆமாம் ஆமாம் :)