ஒரு சேரி வீட்டின் உறுப்பினர்கள்

காலையிலிருந்து வெந்த உடம்பை
எரியூட்ட டாஸ்மாக்கில்
மொத்தமாய் கூலி தொலைக்கும்
அப்பா!

சோற்றுக்கு கூட பணம் தாராதவனை
கெட்ட வார்த்தையில் கடிந்துக் கொண்டே
அவனுக்கும் சேர்த்து சோறு வடிக்கும்
அம்மா!

ஊரில் உள்ள சேறேல்லாம்
தந்து சேர்க்கும்
வீடோடு ஒட்டிக் கொண்ட
ஒரு தெருநாய்!

அப்புறம்,
வீட்டின் கூரை ஓட்டை
ஒவ்வொன்றிலும் ஒரு நிலவு
தேடும் சில பிள்ளைகள்!

- ப்ரியன்.

6 பின்னூட்டங்கள்:

துடிப்புகள் said...

கெட்ட வார்த்தையில் கடிந்துக் கொண்டே
அவனுக்கும் சேர்த்து சோறு வடிக்கும் - super

ப்ரியன் said...

நன்றி முகில் :) தினம் தினம் சென்னையில் நாம் காணும் நிகழ்வுகள்தானே இவை எல்லாம்

யாத்திரீகன் said...

முக்கியமான ஒன்னை விட்டுட்ட ப்ரியன்..

"அன்பு,பாசம்,விட்டுக்கொடுத்தல் என்ற தூய தமிழ் வார்தைகளறிந்திடாமலே,
அவை நிறைந்துவழியும் நெஞ்சங்கள்"


-
செந்தில்/Senthil

ப்ரியன் said...

செந்தில் சைக்கிள் கேப் ல சின்ன "நச்" கவிதை சொல்லிடீங்க...நிசமாவே நல்லா இருக்கு

யாத்திரீகன் said...

:-D நம்மளோட.. இந்த மற்றும் இந்த முயற்சிய கொஞ்சம் பாத்து சொல்லு ப்ரியன்..

பி.கு: இந்த -ங்க வேணாமுன்னு தானே அத என் பின்னூட்டத்துல தவிர்த்துருக்கேன்.. ;-)

-
செந்தில்/Senthil

ப்ரியன் said...

-ங்க போட்டதான் வருத்தமே ஏதோ நம்மளுக்கு வயசாய்ட்ட மாதிரி ஒரு பீலிங்