காவல்

இரவெல்லாம்
கண்விழித்துப்
பார்த்திருந்தேன் நிலவை;
ஆனாலும்,
காணாமல் போயிருந்தது
காலையில்
என் காவலையும் மீறி!

- ப்ரியன்.

5 பின்னூட்டங்கள்:

Radha N said...

நிலவைப் பார்த்திருக்கையில் அந்த(!)
நிலவை நினைத்திருப்பீர்களோ?

காணாமல் போனது
விண்ணிலவா இல்லை இந்த
மண்ணிலவா?

ப்ரியன் said...

நிச்சயமாக அந்த நிலவை நினைக்கவில்லை நாகு ;) ஆதலால் காணாமல் போனது விண்ணிலவே மண்ணிலவல்ல :)

காதல் கவிதையாக யோசிக்கும் மனதை கொஞ்ச நாளாய் கஷ்டப்பட்டு கட்டிவைத்திருக்கிறேன் கெடுத்துவிடாதீர்கள் :)

நன்றி நாகு

Anonymous said...

அடடா.. அதுதான் என்
முற்றத்தில் நீண்டநேரமாக
நிலா நின்றது.. இப்பத்தானே
புரிகிறது.. :-)

அழகான கவிதை

நேசமுடன்..
-நித்தியா

ப்ரியன் said...

நன்றி நித்தியா...

நன்மனம் said...

இரவு முழுவதும் விழித்திருந்த கலைப்பில் நிலவு தூங்க சென்றிருக்கும் இன்றிரவு மீண்டும் வரும் கவலை வேண்டாம்.