சில காதல் கவிதைகள் - 6
பிறைச்சந்திர
மல்லிகை மொட்டுக்கள்
உன் கூந்தல் ஆகாயமேற
பூரணச் சந்திரன்கள்!
- ப்ரியன்.
உன் பாதங்கள்
விட்டுச் சென்ற
சுவடுகளில் எல்லாம்
பட்டாம் பூச்சிகள்
மொய்த்து கிடக்கின்றன!
- ப்ரியன்.
உன்
கால் சுவட்டில்
கால் வைத்து
நடந்து வந்தேன்!
திரும்பி பார்த்தால்
கால் சுவடு
இருந்த இடமெல்லாம்
காதல் சுவடு!
- ப்ரியன்.
குளத்து நீருக்கு
குனிந்து முத்தமிட்டபடி
இருந்தவனை பார்த்தவர்கள்
கவிஞனல்லவா ரசிக்கிறான்
என்றவாறு நகர்ந்தார்கள்!
அவர்களுக்கு எப்படித்தெரியும்
குளித்துப் போன
உன் பிம்பம்
அதில் தங்கியிருப்பது!
- ப்ரியன்.
எல்லா ஊர் மீன்களும்
பாசித் தின்று உயிர்வாழும்
நம்மூர் மீன்கள் மட்டும்தான்
உன் அழகை தின்று
உயிர் வளர்க்கின்றதுகள்!
- ப்ரியன்.
நம்மூர் குளத்து
தாமரை மட்டுமென்ன
இவ்வளவு அழகென்பவளே!
உஷ்!ரகசியம்!
நீ குளிக்கையில்
கரைந்த ஒருதுளி
அழகுதான் காரணி!
- ப்ரியன்.
5 பின்னூட்டங்கள்:
காதல் கவிதைகள் கடலலைகளாய்
பொங்குகின்றனவே!!!!!.ப்ரியன்!
உங்களை காதல் வியாதி தாக்கி
இருக்கிறது என நினைக்கிறேன்!!!!!.
கவிதைகள் அனைத்தும் அருமை.
தொடரட்டும் பதிவுகள்.வாழ்த்துக்கள்.
அன்புடன்,
துபாய் ராஜா.
Neengal Kaathalai Kathalikireergala allathu ungal Kaathaliyai Kathalikireergala priyan?
Anaithu kavithaigalum illai illai ungal anaithu unarvugalum arumai arumai
Ungal Rasigai :)
நன்றி துபாய் ராஜா & அனானி
அட எனக்கு கூட ரசிகைகள் இருக்காங்களா?
ப்ரியன்,
//குளத்து நீருக்கு
குனிந்து முத்தமிட்டபடி
இருந்தவனை பார்த்தவர்கள்
கவிஞனல்லவா ரசிக்கிறான்
என்றவாறு நகர்ந்தார்கள்!
அவர்களுக்கு எப்படித்தெரியும்
குளித்துப் போன
உன் பிம்பம்
அதில் தங்கியிருப்பது!//
//பிறைச்சந்திர
மல்லிகை மொட்டுக்கள்
உன் கூந்தல் ஆகாயமேற
பூரணச் சந்திரன்கள்!//
அருமையான கவிதைகள். ப்ரியன், நீங்கள் காதல்வசப்பட்டுள்ளீர்களா? காதலில் திளைத்தவர்களால்தான் இப்படி உணர்வுபூர்வமாக எழுத முடியும் என நினைக்கிறேன். பாராட்டுக்கள்,
நன்றி வெற்றி
/*
காதலில் திளைத்தவர்களால்தான் இப்படி உணர்வுபூர்வமாக எழுத முடியும் என நினைக்கிறேன். */
அப்ப்டியா?
Post a Comment