சில காதல் கவிதைகள்- 9

உனக்குத் தெரியுமா என
எனக்குத் தெரியாது
உன்னைவிட அழகானவள்
நீ!

- ப்ரியன்.

நீ முகத்தில்
எழுதும் அதையே
காகிகத்தில் வரைகிறேன்
கவிதை என்கிறது
உலகம்!

- ப்ரியன்.

எழில் என்பதற்கு
சரியான எடுத்துக்காட்டு
கேட்டேன் உன்னைக் காட்டியது
தமிழ்!

- ப்ரியன்.

வானப் போர்வையெங்கும்
நட்சத்திர ஓட்டைகள்!
உன் கூந்தல்
உதிர் கறுநூல்களை தா!
தைத்துக் கொள்ளட்டும்
இரவு!

- ப்ரியன்.

உன் உயிரோடு உயிராகும்
வரம் கூட வேண்டாம்!
உன் உயிருக்கு நிழலாகும்
வாய்ப்பாவது தா!

- ப்ரியன்.

உறங்கட்டும் விடு!
உன்னை தேடோ
தேடோ என்று தேடி
என்னிடம் கொடுத்த
களைப்பில் உறங்கிக்கிடக்கின்றன
என் கவிதைகள்!

- ப்ரியன்.

21 பின்னூட்டங்கள்:

Unknown said...

ப்ரியன்...

கவிதைகள் அழகு...அருமை...

இது போல மேலும் பல கவிதைகளை உங்களிடம் எதிர்பார்க்கும்,
அருள்.

ப்ரியன் said...

வாங்க அருட்பெருங்கோ,

நிச்சயமாக உங்களைப் போன்றோர் ஆதரவுடன் தொடர்கிறேன்...

நவீன் ப்ரகாஷ் said...

//உறங்கட்டும் விடு!
உன்னை தேடோ
தேடோ என்று தேடி
என்னிடம் கொடுத்த
களைப்பில் உறங்கிக்கிடக்கின்றன
என் கவிதைகள்!//


மிகவும் ரசித்தேன் :) வாழ்த்துக்கள் ப்ரியன்!!

பழனி said...

வானப் போர்வையெங்கும்
நட்சத்திர ஓட்டைகள்!
உன் கூந்தல்
உதிர் கறுநூல்களை தா!
தைத்துக் கொள்ளட்டும்
இரவு!

அருமையான கற்பணை .. மிகவும் ரசித்தேன் ..

பழனி said...

வானப் போர்வையெங்கும்
நட்சத்திர ஓட்டைகள்!
உன் கூந்தல்
உதிர் கறுநூல்களை தா!
தைத்துக் கொள்ளட்டும்
இரவு!

அருமையான கற்பணை .. மிகவும் ரசித்தேன் ..

ப்ரியன் said...

அட காதல் அரசர் "நவீன்" இடமிருந்து பாராட்டா! நன்றி நவீன் :)

ப்ரியன் said...

நன்றி தயா! tya வை தயா என மாற்றலாமே :) என் மனதில் தோன்றியதை சொன்னேன் தோழி

ப்ரியன் said...

நன்றி பழனி!

நவீன் ப்ரகாஷ் said...

காதல் கவிதை என்பதற்கு
சரியான எடுத்துக்காட்டு
கேட்டேன் உன்னைக் காட்டியது
தமிழ்!


உங்கள் கவிதையை சிறுது மாற்றியதற்கு மன்னிக்கவும் :)
நான் காதல் அரசன் இல்லை ப்ரீயன் :))

ப்ரியன் said...

/*உங்கள் கவிதையை சிறுது மாற்றியதற்கு மன்னிக்கவும் :)*/
மன்னிப்பா!கிடைக்கவே கிடைக்காது நவீன்!! :)

கவிதையாய் மறுமொழிந்தற்கு நன்றி நவீன்!

/*நான் காதல் அரசன் இல்லை ப்ரீயன் :))*/

ஆமாம் ஆமாம் நீங்கள் காதல் கவியரசர் :)

Radha N said...

ம்ம்.....அருமை! குறிப்பாக கடைசி கவிதை

ப்ரியன் said...

நன்றி நாகு!

Anonymous said...

saw your profile at orkut.... that is how i came here.... wonderful.... thats all i can say....

ப்ரியன் said...

@Hema

Thanks Hema...

துடிப்புகள் said...

first one is nice :)

துடிப்புகள் said...

ungalai vida azahagaanathu
ungal kavithaigaL :)

ப்ரியன் said...

நன்றி முகில்!ரொம்ப நாள் கழிச்சு வலைப்பூ பக்கம் வந்திருக்கீங்க போல!

Anonymous said...

உன்னை விட அழகானவள் நீ... என்பது கண்ணனிக் கவிதை நூலின் பெயர். உங்கள் கவிதையின் ஒருவரி !

இங்கிருந்து அங்கேயா ? அங்கிருந்ந்து இங்கேயா ?

ப்ரியன் said...

தகவலுக்கு நன்றி விக்னேஷ் (என் இயற்பெயரும் இதுதான்).உன்னை விட அழகானவள் நீ...கவிதை புத்தகமா?நான் படித்ததில்லை/பார்த்ததும் இல்லாஇ.தெரியவில்லை விக்னேஷ்,சிலசமயங்களில் இம்மாதிரி நிகழ்வது உண்டு.புத்தகம் எங்கே கிடக்கும் சென்னை நியூ புக் லேண்ட்சில் கிடக்குமா?

Anonymous said...

அன்பின் ப்ரியன்

சும்மா 'நச்'சுனு இருக்கு

அன்புடன்
பரநீதரா

gk said...

கவிதைகள் மிகவும் அருமை...........