அய்யனார்
கவிதையை பெரியதாக்கி படிக்க படத்தின் மேல் சொடுக்குக
சென்ற வருட வறட்சிக்கே
ஊர் காலியானது தெரியாமல்
இன்னும்,
காவல் காத்துக் கொண்டிருக்கிறார்
ஊர் எல்லையில் அய்யனார்
- ப்ரியன்.
இன்னுமொரு அய்யனார் கவிதை சுட்டி :
ஒன்னுமில்லை: எல்லாரும் அய்யனாருதான்
பதித்தவர் : ப்ரியன் @ 20 பின்னூட்டங்கள்
வலைப்பதிவர் சுற்றுலா - 2
வீரமணியைத் தொடர்ந்து
ரெடி செட் கோ... மடங்கி மடங்கி இருப்பதால் இது கவிதை அல்ல
பினாயிலுக்கு ஸ்ட்ரா
பூங்காவில் கூட்டு சேர்ந்து கூத்தடித்த
முன்னாள் தலைமை ஆசிரியனுக்கு விடை கொடுத்து
நகருங்கால்,
தம்பி அழைத்தது அவ்வாசிரியனே
பாலாவை சுட்டி அவரிடம் மன்னிப்பு கோரியதாய்ச் சொல்லும்
பேசிய பேச்சுக்கெல்லாம் ஏட்டிக்கு போட்டி பேசினேன்
தவறாய் எண்ணி இருக்கலாம்.
(கண்ணன் , தலைமை ஆசிரியர் , குப்புசாமி , ஜெய்சங்கர் , மா.சிவக்குமார் , சிங்.ஜெயக்குமார்,பாலபாரதி , நான் , அருள்குமார்)
தவறாக எண்ணுபவரல்ல பாலா என்பதினை பகன்று
ஓடி வந்து ஒட்டினேன் பாலாவுடன்
சில அந்தரங்க விடயங்கள் பேசிக் கொண்டு
பூங்காவின் வாசல் வந்தடைந்தோம்
அங்கே ஆளுக்கு ஆள் யார் யார் மாகாபலிபுரம்?
என்ற கேள்வி கொக்கியோடு
என்னைத் தவிர எல்லோரும் தயார்
ஒருவருக்கு மட்டும் வாகனம் இல்லை
என்னுடைய வாகனம் தந்து உதவ தயாராய் இருந்தும் (நிசமாகத்தானுங்க)
மறுத்துவிட்டனர் என் அலுவல் எண்ணி
வீரமணியும் அருளும் வாகனம்
சம்பாதித்து வர புறப்பட
தேநீர் அருந்த பறந்தது மிச்சப் பட்டாளம்
கடைசியில் பார்த்தால்
தேநீர் தேநீர் என கேட்டவர் பாலா மட்டும்
சிங் குளிர் பானம் கேட்க
சட்டென தடை வந்தது பூச்சிக் கொல்லிகள் பெயரால்
நாட்டு குளிர்பானமான இளநீருக்கு அடித்தது யோகம்
6 வெட்டுங்கள் என சொல்லி பேச்சு ஆரம்பிக்க

(
வீரமணி , ஜெய்சங்கர் , மா.சிவக்குமார் , அருள்குமார் ,பாலபாரதி)
சிவக்குமாரும் பாலாவும் கதை கதையாய்
புரியாத பெயர்கள்
புதிய பெயர்கள்
கொண்டு இலக்கியம் பேச
மற்றவர்கள் இளநீர் உண்டே
சொந்த கதை சோகக் கதைப் பேசினோம்
"தற்கொலை செய்து கொண்டாரா பாரதி?"
என பாலா தான் படித்த கட்டுரை சொல்ல
புதுமைப்பித்தன் கூட அப்படி இருக்கலாம்
என சிவக்குமார் கொளுத்திப் போட
பாலாவின் பம்பாய் (மும்பை) அனுபவம்
மெல்ல மெல்ல படர்ந்து விரிந்தது
அந்த பிளாட்பாரத்தில்
போண்டா பஜ்ஜியை
வேண்டாமென புறந்தள்ளி
சூடாக தேநீர் மட்டும் அருந்திய பாலா
இளநீரும் வேண்டுமென சொல்ல
மக்கள் நாங்கள் அவரை ஒருமாதிரி பார்க்க
பினாயிலுக்கே ஸ்டாரா போட்டு கொடுத்தால்
குடிக்கும் கும்பல் நாம் என்றபடியே
எதையும் கண்டு கேளாமல்
இளநீரையும் அடித்தார் ஒரு அடி
அதை ஒட்டி கள்ளு
தெளுவு என பேசி
தள்ளாடிபடியே அருளுக்காக
காத்திருத்திருந்து நின்றோம்
எனக்கோ அந்தரங்க அலுவல்
ஒரு பக்கம் மகிழ்ச்சி ஊட்டுனாலும்
என்னை விட்டுட்டு போறங்களே
பாவி மக்கள் என சங்கடமாகவும் இருந்தது
காத்திருந்த சில நொடியில் அருளும்
வீரமணியும் பறந்து வர (வாகனத்தில்தான்)
எல்லோரும் புறப்பட்டோம்
எந்தன் வாகனம் மவுண்ட் ரோடு நோக்கி விரைய
அன்பர்களின் வாகனம் பெட்ரோல் குடிக்க
பக்கத்திலேயே பங் தேடி நின்றது!
இனி 'தல' பாலபாரதி தொடர்வார்.
பதித்தவர் : ப்ரியன் @ 24 பின்னூட்டங்கள்
குறிச்சொல் வலைப்பதிவர் சுற்றுலா
நீ நதியாக!
கரையாக
படர்ந்து கிடக்கிறேன்!
தொட்டு தவழ்ந்து
சிலிர்ப்பூட்டியபடி
நகர்கிறார் நீ நதியாக!
*
பட்டுப்போன
பூக்களாக
என் கவிவரிகள்!
உன் வாசிப்பில் மயங்கி
பூரித்து பூக்கிறது
புதுப் பூவாய்!
*
உயிருக்கு தூண்டில் போடும்
மீன்கள்
உன் கண்கள்!
*
நீயொரு பூவாய்!
நானொரு பூவாய்
தனித்து ரசித்து
சிரித்திருந்தோம்!
நம்மீது வந்தமர்ந்து
மன மகரந்த சேர்க்கை புரிந்து
புன்னகைத்து பறந்து திரிகிறது
காதல் வண்டு!
*
இதயத்தின் நான்கு
அறை சுவர்களிலும்
மாட்டிவைத்திருக்கிறேன்
உன் பு(ன்ன)கைப்படத்தினை!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 6 பின்னூட்டங்கள்
பூப்படைந்த கவிதை!
நானும் நீயும்
தூரமாயிருக்கும் போது
சுடுகின்ற
அதே மவுனம்!
அருகருகே இருக்கையில்
அழகாய் இடையில்
வந்தமர்ந்துக் கொள்கிறது!
*
என் கவிதை புத்தகத்தில்
கண் தெரியாதவள் போல்
வருடி நீ படித்த
அக்கவிதைதான்
பூப்படைந்த கவிதை!
*
உனைப் பார்க்கப் போகும்
அந்நொடியில்தான்
அடைப்பட்டிருக்கிறது
எந்தன் உயிர்!
*
உன்னிடம்
பேசிக்களிக்க
புது மொழி கண்டறிந்தேன்!
மெள்ள விசாரித்ததில்
கண்டேன்
அதன் மொழி மவுனம்!
*
உன் நினைவுகளை
அடுக்கி அடுக்கி வைத்ததில்
என் இதயம் ஆனது
பெரிய காதல் நூலகம்!
*
காதல் கடவுளிடம் கேட்டுவைத்தேன்
அவனுக்கே தெரியவில்லையாம் - இப்போது
உன் வாசலில் காத்து கிடக்கிறோம்
சாளரம் திறந்து சொல்லிவிட்டுப் போ
காதல் என்ன நிறம்!
- ப்ரியன்.
பதித்தவர் : ப்ரியன் @ 25 பின்னூட்டங்கள்
