அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப் போட்டி

இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!

"இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே"


எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது...

உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.


போட்டி விபரம்:

கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.

1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை

வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 'அன்புடன்' உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)

2. இசைக்கவிதை* - பாடச்சுவை

சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

3. ஒலிக்கவிதை - கேட்கச்சுவை

சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.

4. படக்கவிதை** - பார்க்கச்சுவை

புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.

5. காட்சிக்கவிதை* - இயக்கச்சுவை

இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.

* இசைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும்
படைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.

** படக்கவிதைக்கான படங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.

விதிமுறைகள்:

1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.

2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.

3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர்,எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடி படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.

4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது.முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது.முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளை பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.

5. படைப்பாளியின் பெயர் , தொடர்பு எண் & முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப் பட வேண்டும்.அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.

6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 - சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணி க்குள்.

7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.

8. படைப்பை anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும்
படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.

9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.

10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

பரிசு:

மொத்த பரிசு மதிப்பு : ரூ. 10,000/-

ஒவ்வொரு பிரிவிற்கும்:

முதல் பரிசு: ரூ. 1000/-
இரண்டாம் பரிசு: ரூ. 500/-
ஆறுதல் பரிசு: இருவருக்குத் தலா ரூ. 250/-


எனப் பகிர்ந்தளிக்கப்படும்.பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. அத்தொகைக்கு ஈடான புத்தகங்களாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்கள்,பரிசு பெறும் படைப்பாளின் தேர்வு. பரிசு பெறும் படைப்பாளி வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், பரிசுப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள அவர் தமிழக முகவரி ஒன்றைத் தரவேண்டியிருக்கலாம்.

முடிவுகள்:

சித்திரைத் திங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.

வாருங்கள் இணையத் தமிழ் மக்களே! இனி இது உங்கள் களம். பங்கேற்று மகிழுங்கள். பரிசுகளை வென்றிடுங்கள். கவிதைச் சாரலால் நனைத்திடுங்கள்.

நன்றி.

**படக்கவிதைக்கான படங்களுக்கு இணைப்பை காண்க.

மேலும் தகவலுக்கு : அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப்போட்டி

படம் : 01படம் : 02படம் : 03படம் : 04
படம் : 05படம் : 06படம் : 07படம் : 08படம் : 09படம் : 10

19 பின்னூட்டங்கள்:

கார்த்திக் பிரபு said...

நன்றி ப்ரியன், நான் விரைவிலேயே அனுப்புகிறேன்

சேதுக்கரசி said...

ஆகா.. இந்த அறிவிப்பை இப்ப தான் பார்க்கிறேன்.. தாமதமா! நன்றி ப்ரியன் :-)

இலவசக்கொத்தனார் said...

முதலாவது போட்டியை மரபுக்கவிதை, புதுக்கவிதை எனப் பிரித்து இருக்கக்கூடாதோ?

tamilnadodi said...

miga arumaiyana sandharppam,nandri

tamilnadodi said...

miga miga arumaiyana sandharppam en thiramaiyai katta nandri

சேதுக்கரசி said...

கில்லி பரிந்துரையில் இந்தப் பதிவு - நன்றி: பாஸ்டன் பாலா.

Anonymous said...

தேசிபண்டிட்ல் இந்த பதிவை இணைத்துள்ளேன். நன்றி.
http://www.desipundit.com/2007/03/18/anbudan/

சேதுக்கரசி said...

டுபுக்கு இதை தேசி பண்டிட்டில் இணைத்திருக்கிறார்:
http://www.desipundit.com/2007/03/18/anbudan

தாணு said...

இதுவரை உங்கள் பதிவுகள் பக்கமே வராதவர்கள்கூட போட்டியில் கலந்து கொள்ளலாம்தானே!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

காட்சிக்கவிதையில் பெயர் இருக்கலாமா?எதற்கு கேட்கிறேன் என்றால்
தேர்வு செய்யும் நடுவர்களுக்கு
யாருடையது என்று
பெயர் தெரியக்கூடாது என்று எதுவும்
நிபந்தனை இருக்கிறதா?


அதே போல் முடிவு அறிவிக்கப்படும்
வரை பதிவில் அதைப்பிரசுரிக்கக்கூடாது என்ற நிபந்தனையும் இருக்கிறதா?
கேட்டுச் சொல்ல முடியுமா?

kovai Ram said...

Anbudan endra pottithalaipe engalai anbudan varavetkiradhu enbathil mikka magilchi. Naan ithil pangetka vaipillai endralum kalandukollum anaivarukkum enathu manamarndha valthukkal.

ப்ரியன் said...

அன்பின் தாணு,

இது எல்லோருக்குமான போட்டி.கட்டாயம் கலந்துக் கொள்ளுங்கள்

தாமதமான பதிலுக்கு மன்னிக்க...

ப்ரியன் said...

/*முதலாவது போட்டியை மரபுக்கவிதை, புதுக்கவிதை எனப் பிரித்து இருக்கக்கூடாதோ?*/

முதலில் அப்படி ஒரு யோசனை இருந்தது நண்பரே.இயல் இசை ஒலி ஒளி பார்க்க என பிரித்ததால் அந்த யோசனை கைவிடப்பட்டது என்றாலும் அடுத்தமுறை உங்களின் யோசனையை அன்புடன் கட்டாயம் பரிசீலனை செய்யும்.

நன்றி

ப்ரியன் said...

/*காட்சிக்கவிதையில் பெயர் இருக்கலாமா?எதற்கு கேட்கிறேன் என்றால்
தேர்வு செய்யும் நடுவர்களுக்கு
யாருடையது என்று
பெயர் தெரியக்கூடாது என்று எதுவும்
நிபந்தனை இருக்கிறதா?*/

ஆம்.காட்சிக்கவிதையில் பெயர் வேண்டாம்.


/*அதே போல் முடிவு அறிவிக்கப்படும்
வரை பதிவில் அதைப்பிரசுரிக்கக்கூடாது என்ற நிபந்தனையும் இருக்கிறதா?
கேட்டுச் சொல்ல முடியுமா? */

இந்த நிபந்தனையும் இருக்கிறது.

Unknown said...

mandhamagi vida ethanitha en sindanayai uli kondu sedhukka or ariya vaaipu

ப்ரியன் said...

நினைவிற்கு கடைசி தேதி 14-04-2007

Anonymous said...

மனது டிக் டிக் என்று அடித்தக்கொள்கிறது.
இன்னும் கவிதை வரவில்லை....
வரும் நேரத்தை சொல்ல முடியாது
வராமல் போய்விடுமோ என்றும் பயம் வருகிறது.
hayah

சேதுக்கரசி said...

தேன்கூடு முகப்புப் பக்கத்தில் இந்த அறிவிப்பு சமீபத்தில் வந்திருக்கிறது... இன்று தான் பார்த்தேன்! :-)

எப்படியோ.. போட்டி முடிவதற்குள் போட்டுவிட்டார்கள் :-)

Unknown said...

நினைவூட்டல் :

கடைசி தேதி 14-04-2007