பெரு விருட்சமாய்
என்
வாழ்வில் பெருவிருட்சமாய்
எழுந்து நிற்கிறாய் நீ;
தினம் தினம்
பூத்து பூத்து
கால் வேர்களைப்
பூஜித்தப்படி நான்!
*
உனை திட்டிவிடும்
கணங்களில் - உன்
விழியோரம் சேரும்
இரு துளிகளின்
வெப்பத்தில்
எரிந்துவிட துணிகிறேன் நான்!
*
எதையெதையோ
கவிதையாக்கும் எனக்கு
உன்னின் வெட்கத்தை
ஒரு எழுத்தாகக்கூட ஆக்கும்
அறிவு எட்டவில்லை இன்னமும்!
*
இப்போதுதான் அவிழ்ந்த மலராய்
எப்போதும் முகம் வைக்க
எப்படி இயலுகிறது உன்னால்?
முடிந்தால்
அந்த இரகசியத்தை கொஞ்சம்
என் வீட்டுத்தோட்ட மலர்களுக்கும்
சொல்லித் தாயேன்!
*
எனை பூவாக்கி சூடிக்கொள்ளேன்
புதுமலராய் பூத்திருப்பேன்
எப்போதும்!
உந்தன் வாசத்தில் - வசத்தில்!
*
கடற்கரையிலிருந்து நாம்
எழுந்து வந்துவிட்டாலும்
அங்கேயே அருகருகில் அமர்ந்து
பேசிக்கொண்டே இருக்கின்றன
மண்ணில் அமர்ந்துவிட்டு வந்த
நம் தடங்கள்!
- ப்ரியன்.
14 பின்னூட்டங்கள்:
//அங்கேயே அருகருகில் அமர்ந்து
பேசிக்கொண்டே இருக்கின்றன
மண்ணில் அமர்ந்துவிட்டு வந்த
நம் தடங்கள்!
//கற்பனை செய்து, கற்பனை செய்து மகிழத்தக்க வரிகள்! ரொம்ப நல்லா இருக்குங்க இந்த கற்பனை :)
ரொம்ப ரசிச்சு படிச்சேன் விக்கி... நல்லாருக்கு
என்
வாழ்வில் பெருவிருட்சமாய்
எழுந்து நிற்கிறாய் நீ;
(பெரு விருட்சமா?? அண்ணி கொஞ்சம் குண்டா இருப்பாங்களோ?)
தினம் தினம்
பூத்து பூத்து ( இங்க ஒரு 'ப்' ப போட்டு,
கால் வேர்களைப்
பூஜித்தப்படி நான்!( இந்த 'ப்' ப தூக்கிடலாமே?)
*இப்போதுதான் அவிந்த மலராய்
(அவிந்த மலரா? மலர் என்ன இட்லியா மச்சி..., அவிழ்ந்த மலர் தானே?)
*கடற்கரையிலிருந்து நாம்
எழுந்து வந்துவிட்டாலும்
அங்கேயே அருகருகில் அமர்ந்து
பேசிக்கொண்டே இருக்கின்றன
மண்ணில் அமர்ந்துவிட்டு வந்த
நம் தடங்கள்! ( கலக்கல்ஸ் விக்கி)
உங்களை ஆறு விளையாட்டுக்கு அழைத்திருக்கிறேன்.
\\இப்போதுதான் அவிழ்ந்த மலராய்
எப்போதும் முகம் வைக்க
எப்படி இயலுகிறது உன்னால்?\\
இயல்பான வரிகள். கலக்குங்க ப்ரியன்
அன்புடன்
தம்பி
nice touching words...
Good ones... cutea irukku ella kavidhaiyum...
//உனை திட்டிவிடும்
கணங்களில் - உன்
விழியோரம் சேரும்
இரு துளிகளின்
வெப்பத்தில்
எரிந்துவிட துணிகிறேன் நான்!//
ப்ரியன்..அப்புறம் ஏன் திட்டறீங்க.. !
கவிதை அருமை.
நன்றி அருள் கருத்துக்களுக்கும் தனிமடலில் எழுத்துப் பிழைகளை சுட்டிக் காட்டியமைக்கும்
> ரொம்ப ரசிச்சு படிச்சேன் விக்கி... நல்லாருக்கு
நன்றி திரு!
> (பெரு விருட்சமா?? அண்ணி கொஞ்சம் குண்டா இருப்பாங்களோ?)
கண்டிப்பா :) இல்லே :)
என்
வாழ்வில் பெரு விருட்சமாய்
என்பதன் அர்த்தம்
என் வாழ்வில் பெரிய பொருளாய் என்பதாய் தானே எடுக்கணும் :)
> இங்க ஒரு 'ப்' ப போட்டு,
நன்றி திரு ப்ளாகில் திருத்திவிட்டேன் பாருங்க :)
> (அவிந்த மலரா? மலர் என்ன இட்லியா மச்சி..., அவிழ்ந்த மலர் தானே?)
அவிழ்ந்த மலர்தான் :) அவசரமாய் தட்டச்சுகையில் நிகழும் தவறு இது நீங்கள் சொல்லும் முன்னமே ப்ளாகில் திருத்திவிட்டேன் அருள் சொல்லி
> ( கலக்கல்ஸ் விக்கி)
நன்றி திரு!
ஆரு விளையாட்டுக்கு வரேன் குமரன் ஏற்கனவே வெற்றியும் நவீனும் அழைத்திருக்கிறார்கள் நாளைக்கு வந்துவிடுகிறேன் :)
நன்றி அனிதா :)
/*கவிதை அருமை. */
நன்றி 'கவி'தா ;)
/*ப்ரியன்..அப்புறம் ஏன் திட்டறீங்க.. !*/
திட்டினதுனாலேதானே இந்த கவிதை கிடைச்சது ;)
எல்லாக் கவிதையும் அருமை ப்ரியன்.
எனக்கு மிகவும் பிடித்தது:
/உனை திட்டிவிடும்
கணங்களில் - உன்
விழியோரம் சேரும்
இரு துளிகளின்
வெப்பத்தில்
எரிந்துவிட துணிகிறேன் நான்!
/
Unnin vetkathai oru eluthaga koda aakum arivu etta villai.
Ungal kathali adikadi vetka poo poopara priyan ? :)
Neengalum athai adikadi rasipeergal enru nenaikiren :)
Ungalin Rasigai :)
Post a Comment