ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள் - உள்புகும் முன்

அன்புடன் அன்பர்களுக்கு,

சென்ற சனவரியில் எனக்கு தனிமை கிடைத்தது என்னவென்று தெரியவில்லை ஏதோ ஒன்று என்னை எழுத உந்த விளையாட்டாய் மழையையும் , பெண்ணையும் காதலையும் வைத்து எழுத ஆரம்பித்தேன்.தூங்கும் போது மணி காலை 4 அதனால் பாதகமில்லை கிட்டத்தட்ட 130 கவிதைகள் :) அதில் மிகவும் இரசித்ததை மட்டும் தேர்வு செய்தேன்...பிடிஎப் ஆக மாற்றி அன்பர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பலாம் என எண்ணினேன்.சரி செய்வதுதான் செய்கிறோம் ஒரு புத்தகவடிவில் தந்தால் என்ன எண்ணி அணிந்துரைக்கு அண்ணன் கவிஞர் புகாரியையும் , திருத்தங்களுக்கு சேதுவையும் அணுகினேன் அவர்கள் ஆவலோடு அதனை ஏற்று சில நாட்களிலேயே முடித்தும் கொடுத்துவிட்டார்கள்...ஆனால் என்னால் உடனடியாக இதில் ஈடுபட முடியவில்லை,வேறு ஒன்றும் இல்லை வேலை...இப்போது எல்லாம் தாண்டி இதோ உங்களின் பார்வைக்கு "ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்"...எப்போதும் போல உங்கள் விமர்சனக்களை எதிர்நோக்கி...

குறிப்பு : "ஒரு நிலவில் சில நட்சத்திரங்கள்" அதிகமான பரும அளவு (4 MB) என்பதால் கோப்பு பரிமாற்ற தளத்தில் இடுகிறேன் (பிடிஎப்) மற்றப்படி எழுத்துவடிவில் இதே இழையிலும் இடுகிறேன்...பிடிஎப் (புத்தக வடிவில்)ஆக பார்க்க கீழுள்ள இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்

http://www.uploading.com/?get=MB9XW285

இணைய இணைப்பு இல்லாதவர்கள் சொல்லுங்கள் தனிமடலில் அனுப்புகிறேன்

2 பின்னூட்டங்கள்:

யாத்ரீகன் said...

ப்ரியன்.. வாழ்த்துக்கள்... பலநாட்கள் இணையத்தில் வலம் வரமுடியாதிருந்தேன்... இந்த பதிவை இப்பொழுத்தான் பார்க்கின்றேன்...

இந்த மின் புத்தகம் போன்று விரைவில் புத்தகங்கள் வெளியிட வாழ்த்துக்கள்.. என்னுடைய அக்ரோபாட் ரீடர் பழைய பதிவு என்பதால் இந்த புத்தகத்தை அதில் திறக்க இயலவில்லை... எப்படியாவது படித்துவிடுகின்றேன்..

மீண்டும் வாழ்த்துக்கள் ப்ரியன்..

ப்ரியன் said...

நன்றி யாத்திரீகன்...

என்னை மதித்து எனக்காக ஒரு பதிவா?மிக்க நன்றி உங்களைப் போல நல்லுள்ளங்களுக்கு நான் என்றும் கடமைப்பட்டவனாக இருக்கிறேன்...