விழுதுகள்

நகரின்
அந்த பிரதான துணிக்கடையின் லிப்டில்
பெருங்கூட்டம் மற்றும் பொதிகளுக்கு இடையில்
எதிர்பாராமல்
நிகழ்ந்து முடிந்தது
அந்த சந்திப்பு!

அதிர்விலிருந்து மீண்டு
நான் உதிர்த்த புன்னகை
உனைச் சேர்ந்திடும் முன்னம்
கழுத்தை வெட்டித் திருப்பிக் கொண்டாய்!

கொஞ்சம் கருப்பாகியிருந்தாய்;
மிஞ்சிய சதையும்
உயிர்ப்பில்லா உதடும்
காதோரம் ஓடிய நரை ஒன்றும்
உன்னை வேறு மாதிரி காட்ட முயன்றிருந்தன!

கட்டிடத்தின் உயரம்
அங்குலம் அங்குலமாய் கடக்க
காலம் தன் கால்களை
வேகமாய் வீசி
ஆண்டு கணக்கில் பின்னோக்கி
பயணப்பட்டிருந்தது!

கை பிணைந்த கணம்
மடி சாய்ந்த தருணம் என
நீளமாய் விழுந்து பரவ தொடங்கிய
நினைவின் விழுதுகள்
சட்டென அறுந்து தொங்கின
லிப்ட் நின்ற வேகத்தில்!

பேசிவிடும் முனைப்புடன்
கூட்டத்தில் முண்டி அடித்து வெளியேறுகையில்
கரைந்து
காணாமல் போயிருந்தாய்
முந்தைய காலத்தை போலவே
சொல்லாமல் கொள்ளாமல்!

வீடு திரும்பியவன்
மனையின் மடி சாய்ந்து
கதைச் சொல்லி அழுது
அவளை
கட்டியபடி உறங்கிப்போனேன்!

தைரியம் சிறிதும் அற்ற நீ
சன்னமாக அழுதிருப்பாயா -
குளியலறை குழாயை
சத்தமாய் திருப்பிவிட்டபடியாவது?!

- ப்ரியன்.


8 + 8 = 8

என்னைப் பற்றி எட்டு விடயங்களைச் சொல்ல நண்பர் விழியன் & காதல் கவி இளவரசன் அருட்பெருங்கோ இருவரும் அழைத்து நாட்கள் எட்டுக்கு மேல் ஆகிறது,இன்னும் அறுவர் வந்தழைத்து அழைப்பவர் எண்ணிக்கை எட்டை எட்டினால்தான் எழுதுவதென்றிருந்தேன்(உண்மை சொல்வதாயின் சோம்பேறித்தனம் அன்றி வேறில்லை).இதற்குமேலும் காக்க வைத்தால் இருவரும் சென்னைக்கு விமானம் பிடித்து வந்து 'டின்' கட்டிவிடுவார்கள் என்பதால்

1.) மிகவும் பாதித்த நிகழ்வு என்றால் , அறியா வயதில் நிகழ்ந்த என் பெரிய மாமாவின் மரணம்.ஒன்றரை வயது வரை எங்கு சென்றாலும் என்னை சுமந்து சென்ற அவரை என்னிடம் நிரந்தரமாய் பிரித்த காதலுக்கு நிச்சயம் பலம் அதிகம்தான்.

2.) கல்லூரியில் நுழையும் முன்பு வரை படிப்பில் சுட்டிதான் , கல்லூரியில் முதல் இரண்டு வருடங்களில் நான்கு 'அரியர்கள்'.உண்மை காரணம் இன்னமும் என்னால் கூட கண்டறிய இயலவில்லை.

3.) நான் காதலிக்கிறேன் என்பது உங்களில் பலருக்கும் தெரிந்த இரகசியம் , எனக்குள் காதல் பிறந்த கதை , நான் என்னவளிடம் என் காதலை சொன்ன கதை தெரிய வேண்டுமா ? இதை படியுங்கள் 'காதல் கதை'.

4.) என் காதலை காதலியிடம் சொன்னதைவிட சுவாரஸ்யமானது , அதை என் பெற்றோரிடம் சொன்ன சம்பவம்.சாதரணமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த ஓர் இரவில் ஏதோ காபி குடிக்க அனுமதி வேண்டுவதுப் போல் சொன்னேன்.அவர்கள் அவ்வளவு சுதந்திரம் தந்து வளர்த்திருந்தார்கள்.

5.) என்னின் 'இருந்தால்' கனவுகள் அடிக்கடி மாற்றம் காணும்.பட்டியலில்

# முதலமைச்சராக இருந்தால்
# பிரதமராக இருந்தால்
# இராஜராஜன் காலத்தில் இருந்திருந்தால்
# இராணுவத்தில் இடம் கிடைத்திருந்தால் ,

என இப்படி பல.ஆனால் இப்போது அடிக்கடி காணும் கனவு 'ஈழம்'.இக்கனவு நிச்சயம் சீக்கிரமாய் பலிக்க வேண்டும்...நிச்சயம் பலிக்கும்...

6.) என்னிடம் எனக்கு பிடித்த குணங்கள் , சகிப்பு தன்மையும் , நேரம் தவறாமையும்.

7.) என்னிடம் எனக்கு பிடிக்காத விடயங்கள் , கோபம் & செயலை தள்ளிப்போடும் செயலும்.இவற்றால் இழந்தவை ஏராளம் என்றாலும் இன்னும் திருந்துவதாய் இல்லை.

என்ன ஆறாவதும் ஏழாவதும் செமத்தியா உதைக்குதா? ஆனா உண்மை அதுதானுங்க.இடம் , ஆள் , பொருள் பொறுத்து குணம் மாறும்.உதாரணத்திற்கு ,

என் வேலை - தள்ளிப்போடப்படும்.
மற்றவர்களின் வேலை - மாட்டாது.

நண்பர்கள் , உறவினர்கள் - சகிப்புதன்மை அளவில் அடங்காது.
நெருங்கிய உறவுகளிடம் \ விதி மீறுபவர்களிடம் - சகிப்புதன்மை - கிராம் என்ன விலை?

8.) ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...!!! இரகசியம்!!! கல்லூரில் கற்ற , தொடர்ந்த மூன்று கெட்ட பழக்கங்களில் இரண்டு பழக்கங்கள் இன்று என்னிடம் சுத்தமாய் இல்லை , மூன்றாவது - அழகு இரசித்தல் (அழகுத் தமிழில் - 'சைட் அடித்தல்') இன்னும் இருக்கு...இருக்கும்...அதுதானே என் பல கவிதைகளின் வித்து...(அழகு இரசித்தல் தப்பா என்ன???).

கொசுறு :

தமிழனுக்கு விஷம் வாங்கினாலும் கொசுறு வேண்டுமே...

தினமும் தவறாமல் முதலில் பார்க்கும் எட்டு இணையதளங்கள்

1.) SDN
2.) இந்தியன் டெலிவிஷன்.காம்
3.) டெலிவிஷன் பாயிண்ட்.காம்
4.) பி.பி.சி. தமிழ்
5.) தட்ஸ்தமிழ்.காம்
6.) தமிழ்மணம்.காம்
7.) அன்புடன்
8.) ஈழம் பேஜ்.காம்

என்னையும் ஆட்டத்தில் இணைத்த நண்பர் விழியன் , அருட்பெருங்கோ இருவரும் எனது நன்றிகள்.

வணக்கம்...

AIDMK Organization விற்பனைக்கு!

'மக்கள் திலகம்' ஆரம்பித்த இயக்கத்திற்கு இந்த நிலைமையா? என்று பதற்றமா?

என்னது பிதற்றுகிறேனா?

நான் சொல்வது 100 க்கு 200 உண்மைங்க...

நம்ப முடியலயா?கொஞ்சம் இந்த விளம்பரத்தை பாருங்க



http://www.aiadmk.org/

குறிப்பு : இப்பதிவு தமிழ்99 தட்டச்சி பழகும் முயற்சியில்...

சுல்தான் - கண்ணு இது புதுசு

நீங்கள் ரஜினி ரசிகரா?

நீங்கள் அனிமேஷன் படவிரும்பியா?

இதோ உங்களுக்கான விருந்து...



சுட்டி : http://www.sultanthefilm.com/

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் - பரிசு பெற்றவர்களின் பெயர் தொகுப்பு

இயல் கவிதை: நடுவர் : திசைகள் ஆசிரியர் மாலன்

ஆறுதல் பரிசு 1 :


கார்த்திக் பிரபு, சென்னை

ஆறுதல் பரிசு 2 :

சோ. சுப்புராஜ், துபாய்

இரண்டாம் பரிசு :

தண்டபாணி பொன்னுரங்கம், சென்னை

முதல் பரிசு :

ஜாபர் அலி, துபாய்

ஊக்கப்பரிசு :

லிவிங் ஸ்மைல் வித்யா (2 கவிதைகள்), மதுரை

உஷா, சென்னை

மாதங்கி, சிங்கப்பூர்

கவிஞன் முதல்வன் (எ) ஸ்ரீராம், ஆஸ்த்ரேலியா

நட்சத்ரன் (எ) கா. முத்துராமலிங்கம், தஞ்சாவூர்

மேரித் தங்கம், சென்னை

இளா, நாமக்கல்

அருட்பெருங்கோ, சென்னை

மதுமிதா, சென்னை

இசைக்கவிதை: நடுவர் : இசைக்கவி ரமணன்

ஆறுதல் பரிசு 1 :


பங்கேற்பு ,இசை, பாடல்: கே.எம். அமீர், சென்னை கவிதை: நாக. சொக்கன்

ஆறுதல் பரிசு 2 :

பங்கேற்பு, கவிதை: சுவாமிநாதன், லாஸ் ஏஞ்சலஸ் பாடியது: கலாவதி

இரண்டாம் பரிசு :

பங்கேற்பு, கவிதை , குரல் : சிறில் அலெக்ஸ் சிகாகோ

முதல் பரிசு :

பங்கேற்பு, கவிதை: S. சங்கரநாராயணன், சென்னை குரல்: லஹரி

ஊக்கப் பரிசு 1:

கவிதையும் பங்களிப்பும்: கவிஞர் மதுமிதா, சென்னை இசையும் குரலும்: பல்கலைத் தென்றல் ஆரெஸ்மணி

ஊக்கப் பரிசு 2:

கவிதை, இசை, குரல் என்று அனைத்தும்: இராஜ. தியாகராஜன், புதுச்சேரி

ஊக்கப் பரிசு 3:

கவிதை, இசை, குரல் என்று அனைத்தும்: விசாலம், மும்பை

ஒலிக்கவிதை: நடுவர்கள் : கனடா ஜெயபாரதன், கவிஞர் சிங்கை இக்பால்

ஆறுதல் பரிசு 1 :


கவிஞர் மதுமிதா, சென்னை

ஆறுதல் பரிசு 2 :

V. லஷ்மணக்குமார், மதுரை

இரண்டாம் பரிசு :

ஷைலஜா, பெங்களூர்

முதல் பரிசு :

மு. பாண்டியன், நெய்வேலி

படக்கவிதை : நடுவர்கள் : ஆசிப் மீரான் , கவிஞர்.பாலபாரதி மற்றும் தம்பி அகிலன்

ஆறுதல் பரிசு 1 :


கே. வி. உஷா, சென்னை

ஆறுதல் பரிசு 2 :

மு. பாண்டியன், நெய்வேலி

இரண்டாம் பரிசு :

சோ. சுப்புராஜ், துபாய்

முதல் பரிசு :

மேரித் தங்கம், சென்னை

காட்சிக்கவிதை : நடுவர் : நிலா என்கிற நிலாச்சாரல் நிர்மலா

ஆறுதல் பரிசு 1 :

கவிநயா என்றழைக்கப்படும் மீனா ,ரிச்மண்ட், அமெரிக்கா

ஆறுதல் பரிசு 2 :

ஆர்.எஸ். மணி , கேம்ப்ரிட்ஜ், கனடா

இரண்டாம் பரிசு :

முத்துலட்சுமி , புது தில்லி

முதல் பரிசு :

சமீலா யூசுப் அலி (என்ற) ஹயா , மாவனல்லை, இலங்கை

நடுவர்களின் உரைகளையும் பரிசு பெற்ற கவிதைகளையும் வாசிக்க

http://groups.google.com/group/anbudan/t/e650dc047b23dadd