சில காதல் கவிதைகள் - 10

#

நீ வாசல் கடக்கையில்
கவர்ந்த வாசனையை
பூசிக் கொண்டு மலர்கிறது
கொல்லைபுற மல்லி!

#

உயிரற்ற செல்களலாக்கப்பட்ட
உரோமங்கள்
உயிர் பெற்று
குத்தாட்டம் போடுகின்றன;
உன் தாவணி ஸ்பரிசத்தில்!

#

தென்றலை ஒத்த
நடைபயின்று கடந்துச் செல்கிறாய்;
ஆயிரம் சூறாவளிகளை
என்னுள் உருவாக்கிவிட்டு!

#

என்னுடன் ஓடிவருவதானால் -
வீட்டையும் தூக்கிக் கொண்டு வா!
உன்னோடு இருபது வருடம்
வாழ்ந்த அதனோடு
இருபது நாட்களாவது
வாழ வேண்டும் எனக்கு!

#

தலை சூட
நீ மல்லி சேகரிப்பதுப் போல;
என் உயிர் சூட
உன் புன்னகை சேர்க்கிறேன்
நான்!

- ப்ரியன்

10 பின்னூட்டங்கள்:

எழில்பாரதி said...

அருமையான கவிதைகள்

விக்கி.....


என்னை மிகவும் கவர்ந்த வரிகள்

"தலை சூட
நீ மல்லி சேகரிப்பதுப் போல;
என் உயிர் சூட
உன் புன்னகை சேர்க்கிறேன்
நான்!"

Anonymous said...

அருமை..
மழைதூறல் போல..ரசித்தேன் :)

Anonymous said...

enna priyan puthusa eluthirinka
avalidam irunthu vasanaiyai poosikonda mallikai malarnthu vasam tharukirathu - pavam mallikai athukku ippadi oru nilaiyaa
Oru Sooravalikke thaangathu idhayam
ithula, aayiram sooravaliya.
ennathu, kaathaliyodu kudithanam nadatha 20 days thana - appadina mokam 30 naal
aasai 60 vathu naal enparkale -
unkal logic padi 20 days only.
rasikalam ppa
vi

ப்ரியன் said...

/*
ennathu, kaathaliyodu kudithanam nadatha 20 days thana - appadina mokam 30 naal
aasai 60 vathu naal enparkale -
unkal logic padi 20 days only.
*/

வணக்கம் அனானி,

இதில் எங்கு ஆசை அறுபது நாள் லாஜிக் வந்தென்று தெரியவில்லை...

~~
உன்னோடு இருபது வருடம்
வாழ்ந்த அதனோடு
இருபது நாட்களாவது
வாழ வேண்டும் எனக்கு!
~~

நன்றாகப் படித்துப் பாருங்கள்...

இவ்வரிகள், அவளையும் தாண்டி , அவளை சாரந்த அஃறிணைகளையும் விரும்பும் , அவனின் அளவு கடந்த காதல் நிலையை குறிக்கிறது...

Unknown said...

்ரியப்ரியன்,

கவிதைகள் வழக்கம்போல அழகு.

இன்றைக்கு சிறப்பு கவிதைகள் வருமென்று கேள்விப்பட்டேனே ;) எதுவும் இல்லையா?

ப்ரியன் said...

~~
எழில் @

அருமையான கவிதைகள்

விக்கி.....
~~

நன்றி எழில்

~~
தூயா @

மழைதூறல் போல..ரசித்தேன் :)
~~

நன்றி தோழி...

ப்ரியன் said...

~~
அருட்பெருங்கோ @

இன்றைக்கு சிறப்பு கவிதைகள் வருமென்று கேள்விப்பட்டேனே ;) எதுவும் இல்லையா?
~~

ஆகா, நீங்களுமா அருட்பெருங்கோ??

ச.பிரேம்குமார் said...

//அருட்பெருங்கோ said...

ப்ரியன்,

கவிதைகள் வழக்கம்போல அழகு.

இன்றைக்கு சிறப்பு கவிதைகள் வருமென்று கேள்விப்பட்டேனே ;) எதுவும் இல்லையா? //

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

Anonymous said...

இவ்வரிகள், அவளையும் தாண்டி , அவளை சாரந்த அஃறிணைகளையும் விரும்பும் , அவனின் அளவு கடந்த காதல் நிலையை குறிக்கிறது...

Purinthathu nanpare - naam kathalikum pothu aval/avan thottathellam avarkal sampanthapatta anaithum namakku oru ulagil illatha visayamagathaan thonum - intha sense il correct

but what i felt, aval vazhntha veedu aval illamala - appa aval veedu mattum thaana vendum enta purithalil appadi eluthiveitten
vijai

Agathiyan John Benedict said...

உங்களின் கவிதைகள் வெகு அருமை!