நீயோ இசையாக வழிகிறாய்!

அதிசயமான நதி நீ;
கலந்துவிட்ட பின்னும்
என்னுள் ஓடிக்கொண்டே இருக்கிறாய்
காட்டாற்றின் வெள்ளமாக!

*

ஒளியால் தொட்டுத் தழுவிச்செல்லும்
வான் நிலவு!
விழியால் தொட்டுச் சீண்டிச்செல்லும்
மண்நிலவு நீ!

*

எந்த செடியில்
மலர்ந்த பூ
நீ!

*

உன்னால் கிழிக்கப்படுகின்றன
என் காயங்கள்
வாசிக்கப்படுகின்றன அவையே
கவிதைகளாய்!

*

உன் கண் இடறி
காதல் கடலில் விழுந்துவிட்ட
குருடன் நான்!

*

ஒடிந்து கிடந்த
புல்லாங்குழலெடுத்து
மகுடி ஊதினேன்!
நீயோ
இசையாக வழிகிறாய்!


- ப்ரியன்.

8 பின்னூட்டங்கள்:

Anonymous said...

எந்த செடியில்
மலர்ந்த பூ
நீ!

மிக மிக அருமை

சிவாஜி said...

எந்த வரி குறித்து பாராட்ட, வழிந்தோடும் இசை என் காதுகளையும் கூர்மையாக்குகிறது.

Unknown said...

/உன் கண் இடறி
காதல் கடலில் விழுந்துவிட்ட
குருடன் நான்!/

!!! சிந்தனை அருமை ப்ரியன்.

Prabhu Chinnappan said...

hi da,
its been long time surfed the blog and got time 2day to have a walkthru...
read ur poems after long time and as usual very nice one.
seeing lot of changes and values in ur current poems with the previous one.
great going da...

Anonymous said...

//உன்னால் கிழிக்கப்படுகின்றன
என் காயங்கள்
வாசிக்கப்படுகின்றன அவையே
கவிதைகளாய்! //

பிரியன் நல்லதொரு கவிதை கொடுத்தீர்கள்.

சிலாகித்த வரிகள் மேலே

வாழ்த்துக்கள்

Anonymous said...

மிக மிக அருமை !! ...
என்ன வலைப்பக்க முகப்பை மாற்றிவிட்டீர்கள் .. இதுவும் நன்றக இருக்கிறது...

ப்ரியன் said...

நன்றி தனா :)

Anonymous said...

உணர்ச்சிகளை சொல்லும் மிக நல்ல கவிதை ப்ரியன்...வாழ்த்துக்கள்.