இசையாக



ஒடிந்த வலியினையும்
தீக்கோலிட்ட
புண்ணினது ரணத்தையும்
காற்றினூடே
சொல்லிச் சொல்லி
அழுகிறது
புல்லாங்குழல்

- ப்ரியன்.

14 பின்னூட்டங்கள்:

ரவி said...

நல்ல படம், அருமையான கவிதை.

ILA (a) இளா said...

இசையில் சுகம் மட்டுமே
அறிந்தவன் நான்;

இசைக்கும் வலிக்குமா?
படித்தபின்
என் மனதுக்கும்.

மணியன் said...

குழலின் கதை, இனிய கவிதை.

சத்தியா said...

வலி சுமந்து
இனிய இசை தரும்
புல்லாங்குழல்!

அழகான கவிதை!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஒடித்தாய்!
தீக்கோலிட்டுத்
துளைத்தாய்!
என்னினும்
உன்னை-
இன்னிசையால்
மகிழ்விக்கிறேன்!
மானிடா!
வலி மறந்து!

யோகன் பாரிஸ்

Anonymous said...

nalla kavithai. padikkumbothu manam lesanathu . vazhthukkal.
regards,
sethu
rishi_sethu@yahoo.com

கைப்புள்ள said...

படம், கவிதை இரண்டுமே அழகு ப்ரியன். வாழ்த்துகள்.

கார்த்திக் பிரபு said...

யாதார்த்தமான வரிகள்..வாழ்த்துக்கள்..


அப்படியே நம்ம பக்கத்து வந்து தேன்கூடு போட்டிக்கு நான் எழுதியுள்ள கதையை படித்து
ஒட்டு போடுங்க..உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க.

Unknown said...

கவிதை நன்று ப்ரியன்!

வாத்தியத்தின் வலிதான் இசையோ??

மதுமிதா said...

ப்ரியன்
என்னவோ செய்யுதுங்க
மனசை உலுக்கி எடுத்து

ராசுக்குட்டி said...

ப்ரியன் கொன்னுட்டிங்க

படத்திற்காக கவிதையா இல்லை கவிதைக்காக படமான்னு பட்டிமன்றமே வைக்கலாம்

Unknown said...

கவிதை, படம் இரண்டுமே அருமை.

Anonymous said...

நல்ல கவிதை; புல்லாங்குழலுக்கு மட்டும் வலிக்கவில்லை; படித்த பின் எனக்கும்.

அன்புடன்,
கவிநயா.

மதுமிதா said...

ப்ரியன்

'கருணாமய சோகமே ஸ்லோகமைனதி
காந்தி ஜனித வாக்யமே காவ்யமைனதி'
ன்னு ஒரு தெலுகு பாடலில் வரும்.

வேடுவனாக இருந்த வால்மீகி முனிவர் பறவையின் சோககீதம் அளித்த
மெட்டில் ஸ்லோகம் எழுத ஆரம்பிக்கிறார் என்பதைச் சொல்லும் பாடல் அது.

இன்னும் ஒருவாட்டி இதைப் பார்த்தேனென்றால் என்ன ஆகுமென்று எனக்கே தெரியவில்லை.

அத்துணை அருமை ப்ரியன் இது.
அதுவும் இதற்கு தலைப்பு இசையாக.
இதுக்கு மேல எழுத முடியல.
வாழ்த்துகள்மா.