வண்ணத்துப் பூச்சி வாழ்க்கை

வரைகின்ற பொழுதுகளில்
மீறி சிந்திவிடுகின்ற
ஒரு வர்ணத்துளியாகத்தான்
வந்தாய் நீ
என் வாழ்வில்!

விட்டில் பூச்சியினுடையதாய்
இருந்த வாழ்க்கை
வண்ணத்துப் பூச்சியினுடையதாய்
மாறியது என்னவோ உண்மை!

- ப்ரியன்.

2 பின்னூட்டங்கள்:

யாத்திரீகன் said...

வர்ணம் பட்ட விட்டில் பூச்சி... அட அருமையான கற்பனை....

ப்ரியன் said...

ந்ன்றி யாத்திரீகன்